பேங்க் இஸ்லாமின் முதல் நிர்வாக இயக்குநரான அப்துல் ஹலீம் இஸ்மாயில் காலமானார்!

top-news

85 வயதான மலேசிய இஸ்லாமிய வங்கியின் தந்தை அப்துல் ஹலீம் இஸ்மாயில் இன்று காலை மரணமடைந்தார். பேங்க் இஸ்லாம் மலேசியா பிஎச்டியின் அதிகாரப்பூர்வ முகத்தள பக்கத்தில் பதிவின் மூலம் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஹலீம் பேங்க் இஸ்லாமின் முதல் நிர்வாக இயக்குநராக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் இஸ்லாமிய நிதியத்தின் அடித்தளத்தை கட்டி எழுப்பிய தொலைநோக்கு தலைவர் என்று வங்கி அவரை பெருமைபட கூறியுள்ளது.

ஹலீமின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னோடி மனப்பான்மை பேங்க் இஸ்லாமின் பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும், மலேசியாவின் இஸ்லாமிய நிதித்துறையின் வளர்ச்சியில் அது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்