தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் அண்ணா – முதலமைச்சர் விஜய் புகழாரம்
- Surendran Sumdraraj
- 15 Sep, 2026
சென்னை, செப். 15 –
தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் தனித்துவமான முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணா என்று தெரிவித்துள்ளார்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சு மற்றும் கூர்மையான எழுத்தாற்றலால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை அண்ணா பெற்றார் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழி மீது கொண்ட ஆழமான பற்றின் காரணமாக மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டியதுடன், மாநில சுயாட்சி கொள்கைக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியவர் அண்ணா என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



