KLIA, சிப்பாங் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட. சோதனையில், 33. 4 மில்லியன் மதிப்புள்ள் கஞ்சா மொட்டுகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம்: கே.எல்.ஐ.ஏ (KLIA) மற்றும் செப்பாங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 33.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா மொட்டுகளை விநியோகிக்கும் முயற்சியை முறியடித்ததோடு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 12 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 21 வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில், ஒரு மலேசிய ஆடவர், நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் ஏழு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும், 418 கிலோ எடையுள்ள 671 பொட்டலங்கள் கொண்ட கஞ்சா மொட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

சந்தேக நபர்களுக்குச் சொந்தமான இரண்டு கார்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் உட்பட 37,700 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளும் இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக ஷாசெலி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *