அண்ணாமலையின் அடுத்த அரசியல் அவதாரம்? பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 2-

தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிறந்த நாளான நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல்கள் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளன.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்களில் “அண்ணாமலை 2.0 அவதாரம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், அவர் மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறாரா, தேசிய அரசியலில் முக்கிய பதவி பெறுகிறாரா அல்லது புதிய அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்குகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், சில அரசியல் வட்டாரங்களில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. அதே நேரத்தில், இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *