கிள்ளானில் கால்வாயில் கிடந்த ஆடவர் உடல்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மே 13: இன்று அதிகாலை கிள்ளான், பத்து 5, ஜாலான் காப்பார் சாலையில், வாகனம் மோதியதில் 2 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அதிகாலை 3.23 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

காப்பார்  நிலையத்திலிருந்து ஏழு அதிகாரிகளும், தீயணைப்பு வாகனத்தில் இருந்த பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுமார் 30 வயதுஇருக்கலாம் என  நம்பப்படும் அந்த நபர், சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *