ஜோர்டன் ஆன்டனி 60 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை
- Surendran Sumdraraj
- 21 Mar, 2026
போலந்து, மார்ச் 21-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் தடகள வீரர் ஜோர்டன் ஆன்டனி, உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
21 வயதுடைய இந்த வீரர், 6.41 விநாடிகள் என்ற இந்த சீசனின் சிறந்த நேரத்தை பதிவு செய்து, அதிரடியான வெற்றியைப் பெற்றார். தனது முதல் பெரிய சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்றது அவரது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
“தங்கம் வெல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் உண்மையில் நான் எனக்காகவிட ரசிகர்களுக்காகவே அதிகம் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று ஆன்டனி தெரிவித்தார். அவர் முன்பு அமெரிக்கன் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், பின்னர் தடகளத்திற்கு மாறியுள்ளார்.
“இந்த இறுதிப் போட்டி மிகவும் சவாலானது. இருப்பினும், என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன. முக்கியமாக, என் அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு, அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கத்தை கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
இந்த வெற்றி, அவரை எதிர்கால தடகள உலகின் முக்கிய நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



