அந்தோணி லோக்கின் ராஜினாமாவை அன்வார் நிராகரிக்க வேண்டும்! - HASSAN KARIM
- THINAGAREN SANGGAREN
- 22 Sep, 2026
செப்டம்பர் 22,
DAP பொதுச் செயலாளர் Anthony Loke அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் அன்வார் அந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும் என PKR மூத்த தலைவரும் PASIR GUDANG நாடாளுமன்ற உறுப்பினருமான Hassan Abdul Karim வலியுறுத்தினார். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தேர்தல் நடைபெறும் என்பதால் தற்போது உள்ள அமைச்சர்கள் அந்த பதவிகளில் நீடிக்க வேண்டும் என Hassan Abdul Karim தெரிவித்தார்.
Anthony Loke, அனைத்து சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைவர். DAP கட்சியையும் கடந்து மற்ற கட்சித் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் அணுக்கமான உறவைக் கொண்டிருக்கும் Anthony Loke போன்றவர்கள் அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என Hassan Abdul Karim தெரிவித்தார். அந்தோணி லோக்கின் ராஜினாமாவின் பின்னணியில் யாருடைய உந்துதலும் இல்லை என்றாலும் இது அவருடைய கொள்கையின் மீதான பிடிப்பைக் காட்டுகிறது. ஆனாலும் அமைச்சரவையில் பக்காத்தானின் எண்ணிக்கையையும் ஆளுமையையும் நாம் நிராகரிக்க வேண்டும் என Hassan Abdul Karim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



