அந்தோணி லோக் விலகுவதால் என்ன பயன்? பாஸ் கட்சி கேள்வி!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 21,

டி.ஏ.பியின் ஒரு அமைச்சர் மட்டும் பதவி விலகுவதால் எந்தவொரு பயனும் இல்லை என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனையுடனான பொதுமன்னிப்பை டி.ஏ.பி ஏற்கவில்லை என்றால் அவர்கள் மாமன்னரின் அவமதிக்கிறார்கள் என பொருள்படுகிறது. டி.ஏ.பியின் ஒரே ஒரு அமைச்சர் பதவி விலகுவதால் என்ன பயன் என Ahmad Fadhli Shaari கேள்வி எழுப்பினார். 

ஒருவர் மட்டும் பதவி விலகிவிட்டு ஒட்டுமொத்த கட்சியே அரசாங்கத்தில் நீடிக்கிறது. அதுவும் அந்தோணி லோக்கின் ராஜினாமாவைப் பிரதமர் அன்வார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை பிரதமர் அன்வார் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்தோணி லோக் மீண்டும் அமைச்சராகத் தொடர்வார் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார். டி.ஏ.பி அரசியல் தந்திரங்களை மலாய்க்காரர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். ஒருவர் மட்டுமே பதவி விலகுவதால் எந்த பயனும் இல்லை என்பதைப் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரான Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *