மந்தின் கொலையாளி சிசிடிவியில் சிக்கினான்! காவல்துறை தேடுதல் வேட்டை
- Shan Siva
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 6: நீலாய், மந்தின் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், 12 குத்துக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு ஆண் சந்தேக நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
டிசம்பர் 28-ஆம் தேதி எடுக்கப்பட்ட CCTV காட்சிகளில், முகமூடி மற்றும் ஹூடி அணிந்த நிலையில் அந்த சந்தேக நபர் பதிவாகியுள்ளார். பாதுகாப்பு காவலரிடம், பாதிக்கப்பட்டவரின் வீட்டு இருப்பிடத்தை கேட்டுவிட்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு அந்த இடத்தை விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீலாய் மாவட்ட காவல் தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஜோஹாரி யாஹ்யா கூறினார்.
தற்போது அந்த நபர் முக்கிய சந்தேக நபராக கருதப்படுவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக அவரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த கொலை வழக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபருக்கு தலை பின்புறம், மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் 12 குத்துக் காயங்கள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரின் ரிமாண்ட் காலத்தை நீட்டிக்க இன்று நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்ய உள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



