ஜனவரி 24 சபா இடைத்தேர்தல் !

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 16: சபா, கினாபத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வேட்புமனுக்கள் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், முன்கூட்டி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு  ஜனவரி 20 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
சபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் டிசம்பர் 5 ஆம் தேதி இறந்ததைத் தொடர்ந்து, லாமாக் சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.
66 வயதான அவர் கடந்த மாதம் நடந்த சபா மாநிலத் தேர்தலில்  153 வாக்குகள் என்ற மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் தனது மாநிலத் தொகுதியை பாதுகாத்தார்.
சபாவின் முன்னாள் துணை முதலமைச்சரும் ஆறு முறை கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த புங் மொக்தார்  2022 பொதுத் தேர்தலில்,  4,330 வாக்குகள் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *