மாமன்னருக்குப் பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 1:

மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.

முகநூல் பதிவில் அன்வார், அரசாங்கம் மற்றும் அனைத்து மலேசியர்கள் சார்பாக, முழு அரச குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் இறைவனின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களோடு திகழ வேண்டும் எனத் தாம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.

மாட்சிமை பொருந்திய மன்னர் நீதியுடனும் ஞானத்துடனும் தொடர்ந்து ஆட்சி செய்யட்டும். நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வின் சின்னமாகவும் திகழும் அரச நிறுவனத்தின் பங்கிற்கு ஏற்ப, கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள மிக உயர்ந்த பதவியை அவர் நிலைநிறுத்தட்டும் என்று அன்வார் கூறினார்.

தானும், மக்களும், அரசியலமைப்பு முடியாட்சிக்கு  அசைக்க முடியாத விசுவாசத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவோம். மன்னர் நீடூழி வாழ்க என்று அவர் பதிவிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *