இந்தியர்கள் விவகாரத்தில் அன்வார் தோல்வி! காரணம் அம்னோ! RAFIZI விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 27 May, 2026
மே 27,
பிரதமர் அன்வாரின் அரசியல் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு அதிகம் எனும் போது, அன்வாரின் ஒரு சில செயல்களால் தற்போது இந்தியர்கள் அன்வாரின் மீது அதிருப்தியில் இருக்க அம்னோ தான் முதன்மை காரணம் என பி. கே.ஆரிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சருமான RAFIZI RAMLi தெரிவித்துள்ளார். பி. கே.ஆரில் இரண்டாவது அதிக எண்ணிக்கையில் இருக்கும் சமூகம் இந்தியர்கள். ஆனாலும் இந்தியர்களின் நலத்திட்டங்கள் மடாணி அரசாங்கத்தில் தொய்வு ஏற்பட்டதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என BERSAMA கட்சியில் இணைந்த RAFIZI RAMLi ஒப்புக்கொண்டார்.
அன்வாரின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு இந்திய பெரும் புள்ளிகள் ஆதரவாக நின்றுள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களாகவும் உள்ளனர். ஆனால் அன்வார், இந்திய அரசியல்வாதிகளை மட்டுமே இணைத்துக் கொண்டு செயல்படுகிறார். அன்வாருக்கு ஆதரவளித்த அரசியல் அல்லாத இந்திய தலைவர்களுடன் அன்வார் செயல்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அம்னோ என்றும் சமூகங்களைப் பிரித்து ஆளும் யுக்தி அம்னோவுக்குத் தெரியும். அம்னோவுக்கு இதில் அனுபவம் அதிகம் என RAFIZI RAMLi தெரிவித்தார்.
அம்நோவைப் போல மலேசியர்களை இனமாகவும், மதமாகவும் பிரிக்க வேறு கட்சிகளுக்குத் தெரியாது. அன்வார் இந்தியர்களை ஏமாற்றினாரா என கேட்டால் அது கிடையாது. ஆனால், யார் மூலமாக அன்வார் இந்தியர்களிடம் ஆதரவைப் பெற்றாரோ, அவர்களின் மூலமாக அன்வார் மீண்டும் இந்தியர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும் , குறிப்பாக இந்தியர் விவகாரங்களில் அம்னோவிடமிருந்து அன்வார் விலகி இருக்க வேண்டும் என RAFIZI RAMLI அன்வாருக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



