அன்வாரின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் அமைச்சர்கள்! முகைதீன் எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 11 Nov, 2026
நவம்பர் 11,
அன்வார் தலைமையிலான MADANI அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதால் அன்வார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் BERSATU கட்சியின் தலைவருமான Tan Sri Muhyiddin Yasin எச்சரிக்கை விடுத்தார். இம்மாத்திரி இக்கட்டான சூழலில் துரோகம் செய்ய முயற்சிக்கும் அமைச்சர்களை அன்வார் அடையாளம் கண்டு அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என முகைதீன் அறிவுரை கூறினார்.
நான் பிரதமர் பொறுப்பில் இருந்த போதும் இதே போன்ற நிலையில் இருந்தேன். அமைச்சர்கள் சிலர் எனக்கு எதிராக செயல்பட்ட போது நான் நிதானமாக இருந்தேன். அதனால் ஆட்சியை இழந்தேன். இப்போது நான் பிரதமராக இருந்திருந்தால் நிச்சயமாக உடனடியாக துரோகம் செய்யும் அமைச்சர்களை உடனடியாக நீக்கியிருப்பேன் என முகைதீன் தெரிவித்தார். இக்கட்டான அரசியல் சூழல் நிலவி வருகிறது என்பதை அனைவரும் உணர்ந்து உள்ளோம். அன்வார் உட்பட பக்கத்தான் தலைமையும் இதை உணர்ந்து உள்ளனர். ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பது யார் என்பதை அன்வார் நிச்சயம் அறிந்திருப்பார். அன்வார் அவர்களை அமைச்சரவையிலிருந்து நோக்குவது ஆட்சியைத் தக்கவைக்க உதவும் என முகைதீன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

