அன்வார் தெளிவாக இல்லை! முகைதீன் சாடல்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 28,

மலேசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவிப்பது அவர் தெளிவாக இல்லை என்பதை உணர்த்துவதாக முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சித் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நான் பிரதமராகப் பொறுப்பேற்றும் கோவிட் தொற்று தொடங்கியது. கோவிட் பரவினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என தெளிவாக நான் சிந்தித்து எடுத்த முடிவு தான் M.T.E.N எனும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு.

இப்பொது இஸ்ரேல் இரான் போரில் அமேரிக்காவும் சம்மந்தப்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பொருளாதாரப் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும் என்பதை அன்வார் உணராமல் நாட்டின் பொருளாதாரம் சீராக இருப்பதாகத் தெரிவித்திருப்பது அன்வாரின் ஆளுமை கேள்விக்குள்ளாவதாக Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். 1997 ஆம் ஆண்டும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த போது இதே M.T.E.N எனும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தியது. அதையே தான் 2020 கோவிட் அவசரகாலத்தின் போது செய்யப்பட்டது என Tan Sri Muhyiddin Yassin நினைவூட்டினார். 

இந்த தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு அரசு சார்ந்த நிறுவனங்களையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் பெறப்படும் வருவாயை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்துவதற்கான ஒரு முறை என்பதால் வெளிநாட்டு இறக்குமதிகள் இல்லாமல் தற்காலிகமாக இத்திட்டத்தை அன்வார் செயல்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சித் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *