இந்த ஆண்டு அன்வாருக்குச் சோதனை காலம்! – RAFIZI கணிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 9,
பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தலைமையில் நாட்டின் பொருளாதாரம் கணிசமாக மீட்சிப் பெற்றிருந்தாலும் இதனால் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையால் அன்வாருக்குச் சோதனையான காலம் என பொருளாதார முன்னாள் அமைச்சரும் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli கணித்துள்ளார். நான் அன்வாருக்கு எதிரானவன் அல்ல. ஆனால் தகுந்த நேரத்தில் நாட்டின் தலைவரை எச்சரிக்க விரும்புகிறேன். பெரும்பான்மையைக் கொண்டிருக்காத அரசியல் கட்சியின் தலைமையில் மலேசியா இந்த பொருளாதார மேம்பாட்டை அடைந்திருப்பது உண்மையில் அதிசயம். இது அன்வாரின் தனித்துவமான ஆட்சித் தன்மையைக் காட்டுகிறது என்றாலும் பெரும்பான்மை இல்லாத கட்சியின் தலைமைக்கு அதன் கூட்டணியின் அழுத்தம் அதிகரிக்கும் என Datuk Seri Rafizi Ramli எச்சரித்தார்.

இந்த 2026 ஆம் ஆண்டு அரசியலுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வாக், ஜொகூர், மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலைப் பாதிக்கும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். அரசியல்வாதிகளை மன நிறைவுப்படுத்தாமல் தேர்தலில் நாம் வெற்றிப் பெற முடியாது. ஆனால் அரசியல்வாதிகளின் மனநிறைவா? நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டமா எனும் இரு வெவ்வேறு கொள்கைகளையும் அன்வார் செயல்படுத்தியாக வேண்டும். இது அன்வாருக்கு இக்கட்டான ஆண்டாகவே அமையும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *