தங்கம் வென்ற அசிசுல்ஹஸ்னிக்கு பிரதமர் வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 1-

 கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கெய்ரின் சைக்கிள் ஓட்டப் பிரிவில் வரலாற்றுச் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்ற தேசிய தடகள சைக்கிள் வீரர் டத்தோ முகமது அசிசுல்ஹஸ்னி அவாங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தி பாக்கெட் ராக்கெட்மேன்” என்று அழைக்கப்படும் அசிசுல்ஹஸ்னி, 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியின் கெய்ரின் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றி அவரது விடாமுயற்சி, உறுதி, மனவலிமை மற்றும் ஒருபோதும் தளராத போராட்ட குணத்தின் பலனாகும் என்றும், சர்வதேச அரங்கில் மலேசியாவின் பெயரை உயர்த்தியுள்ளதோடு, நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிளாஸ்கோ 2026 போட்டி ஏற்பாட்டாளர்களின் பதிவையும் பிரதமர் தனது வாழ்த்து செய்தியுடன் பகிர்ந்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *