மகளை 10 ஆண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்த ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 5,

தெலுக் இந்தானில் தனது மகளை 10 ஆண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்த 57 வயது ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இன்று தெலுக் இந்தான் Sesyen நீதிமன்றத்தில் தன் மீதானக் குற்றத்தை மறுத்த 57 வயது ஆடவர் மேல் விசாரணையைக் கோரினார். 

கடந்த ஜனவரி 17 தனது தந்தை தம்மைக் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தோட்டத் தொழிலாளராந 57 வயது ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 

வீட்டில் தம்மைப் துன்புறுத்தியதாகவும் கட்டி வைக்கப்பட்டிருந்த தாம் அவருக்குத் தெரியாமல் தப்பி வந்து புகாரளிப்பதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் தற்போது சமூகநல மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட 57 வயது ஆடவரைக் காவல் துறையினர் விசாரிக்கவும் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 7 ஆம் நாள் என Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seorang lelaki berusia 57 tahun di Teluk Intan ditahan kerana didakwa merogol anak perempuannya selama 10 tahun. Mangsa berusia 21 tahun kini ditempatkan di pusat perlindungan. Mahkamah Sesyen menetapkan 7 Mac sebagai tarikh perbicaraan seterusnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *