புத்ராஜெயா ஏரியை சுற்றிப் பார்த்தார் ஜப்பானியப் பிரதமரின் துணைவியார்!

- Muthu Kumar
- 11 Jan, 2025
புத்ராஜெயா, ஜன. 11-
மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபாவின் துணைவியார் யோஷிக்கோ இஷிபா, குரூஸ் தாசேக் புத்ராஜெயா உல்லாச படகுமூலம் அந்நகரின் எழில்மிகு கட்டடங்களைக் கண்டு ரசித்தார்.
காலை 9.30மணிக்கு புத்ராஜெயா வந்தடைந்த அவரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் வரவேற்றார். புத்ராஜெயாவின் எழிலை ரசித்தபடி டாக்டர் வான்அஸிஸாவுடன் சுமார் 90 நிமிடங்களுக்கு யோஷிக்கோ அளவளாவினார். சுவர் அலங்கரிப்புக்காக செம்பருத்தி மற்றும் பட்டம் வடிவிலான மலேசிய பாத்தேக் ஓவியத்தையும் வரைய இஷிக்கோ முற்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *