செயற்கை ரத்தம் உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!

top-news
FREE WEBSITE AD

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலான ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

அனைத்து இரத்த வகைகளுக்கும் பொருந்தக்கூடிய செயற்கை ரத்தத்தை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது, ​​அதன் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவ சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு, இந்த செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த ரத்தத்தை இரண்டு வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதியான இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெடுத்து இந்த செயற்கை ரத்தம் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக, இரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் இரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உண்டு. அதுமட்டுமின்றி, ரத்தம் பெறுபவரின் இரத்த வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், இந்த செயற்கை இரத்தத்திற்கு அந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

தற்போது, தன்னார்வலர்களிடம் இந்த செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030-க்குள் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு நோபல் பரிசுக்கு தகுதியானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவிலும் இதே போன்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும். இதன் மூலம், அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் செயற்கையாக உருவக்கப்படும் ரத்தம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியிருப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவ உலகில் மிகப்பெரிய மைல் கல் எட்டப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *