ஒருவரின் இறப்புக்குக் காரணமான Rapid KL ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 29: நேற்று காலை சுபாங் ஜெயாவில் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்தில் சிக்கிய 'ரேபிட் கேஎல்' (Rapid KL) பேருந்தின் 29 வயது ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுபாங் ஜெயா காவல் துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமாட் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் காலவரிசை மற்றும் காரணத்தைக் கண்டறிய அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும்  என்று கூறிய அவர், ஓட்டுநருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 நேற்று காலை 6.19 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்தில், 'பெர்சியாரன் சுபாங் பெர்மாய்' (Persiaran Subang Permai) வழியாக 'சுபாங் மெவா' (Subang Mewah) நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது மோதியது.

இவ்விபத்தில் 19 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *