ரேபிட் ஆன்-டிமாண்ட் வேன் சலுகை கட்டணம் RM 2 - ஆக அமல்படுத்தப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 19: ரேபிட் ஆன்-டிமாண்ட் வேன் சேவைக்கான ஒரு ரிங்கிட் (RM1) சலுகை கட்டணம், வரும் பிப்ரவரி 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சேவைக்கு நிரந்தர கட்டண முறையாக RM2 என்ற நிலையான கட்டணம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் மூலோபாயப் பிரிவுத் தலைவர் ஷாருல் அஸ்வா அப்துல் ராணி, இன்று மெனாரா பிரசரானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த புதிய கட்டணம், My50, Rapid Kota, Rapid Kembara மற்றும் Rapid Keluarga பாஸ் வைத்திருப்போருக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய கட்டண முறை, சோதனை அடிப்படையிலான Proof-of-Concept காலத்துடன் முடிவடையும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், 2027 இறுதியில் இருந்து 2028 முடிவுவரை, படிப்படியாக 300 மின்சார வேன்கள் இந்த சேவையில் சேர்க்கப்பட உள்ளதாக ஷாருல் அஸ்வா தெரிவித்தார். இதன் மூலம், சேவையின் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டு, செயல்பாடு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த 300 மின்சார வேன்களில், 130 வேன்கள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும், 170 வேன்கள் பினாங்கிலும் இயக்கப்பட உள்ளன. அதே நேரத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கில் 22 புதிய சேவை மண்டலங்களும், பினாங்கில் 23 புதிய மண்டலங்களும் சேர்க்கப்படவுள்ளதாக அவர் விளக்கினார். தற்போது, இந்தச் சேவை மொத்தம் 82 மண்டலங்களில், அதாவது கிள்ளான் பள்ளத்தாக்கில் 71, பினாங்கில் 11 மண்டலங்களில் இயங்கி வருகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ரேபிட் ஆன்-டிமாண்ட் சேவைகளை மேம்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக ஷாருல் அஸ்வா தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *