‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானது குறித்து ஐகோர்ட்டில் முறையீடு
- Surendran Sumdraraj
- 16 Apr, 2026
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் புதிய முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
முன்னதாக இந்த திரைப்படத்தில் ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறி, தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்திருந்தது. இதனால் படம் மறுஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தனி நீதிபதி உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அண்மையில் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொறுப்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவசரமாக விசாரணை நடத்தவும் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



