பெண்களை அழவைத்த "ஹேப்பி ராஜ் - ஜி.வி. பிரகாஷ் உருக்கம்!

top-news
FREE WEBSITE AD

உருவ கேலியை மையமாக கொண்டு உருவான "ஹேப்பி ராஜ்" திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுக்கொண்டே இருந்தாலும், அதில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் பலரையும் ஆழமாக பாதித்துவிட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த படத்தில் குறிப்பாக நடிகர் ஜார்ஜ் மரியான் நடித்துள்ள கதாபாத்திரம் தான் அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறது. அவர் வெளிப்படுத்திய தந்தை வேதனை, மகன் மீது கொண்ட அன்பு ஆகியவை திரையில் மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

"ஹேப்பி ராஜ்" படத்தின் மையக்கதை தந்தை - மகன் உறவை சுற்றியே நகர்கிறது. ஒரு மனிதனின் வெளிப்புற தோற்றத்தை வைத்து சமூகமே அவனை எப்படி கேலி செய்கிறது... அந்த கேலிகள் அவன் குடும்பத்தையும், குறிப்பாக அவன் மகனின் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது என்பதையே படம் உணர்ச்சியோடு பேசுகிறது.

சிறுவயதில் அப்பாவை ஹீரோவாக பார்த்த மகன், வளர வளர சமூகம் பேசும் வார்த்தைகளால் அப்பாவை வெறுக்க தொடங்குகிறான். ஆனால் இறுதியில், அப்பாவின் உண்மையான அன்பையும் தியாகத்தையும் புரிந்து கொள்ளும் தருணங்கள் தான் இந்த படத்தின் இதயம். இந்த காட்சிகள் பல பெண்கள் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் படம் ஓடும் திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களின் ரியாக்ஷன் பார்த்துள்ளார். படம் முடிந்து வெளியே வந்தபோது, பலரும் அவரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.அப்போது ஒரு பெண்மணி கண்கலங்கியபடி அவரிடம் பேச முடியாமல் அழுதுள்ளார்.உடனே அவரை ஆறுதல் கூறி அனுப்பிய ஜி.வி. பிரகாஷின் இந்த செயல் அங்கிருந்தவர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த சம்பவம் மூலம், படம் பெண்களை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.

சமீப காலமாக தொடர்ந்து சில சுமாரான படங்களில் நடித்ததாக விமர்சனங்களை சந்தித்த ஜி.வி. பிரகாஷ், "ஹேப்பி ராஜ்" மூலம் மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் அவர் இளைய தலைமுறையின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். முதல் பாதி லைட்டான, இளைஞர்களை கவரும் வகையில் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுக்க உணர்ச்சியை மையமாக கொண்டு நகர்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *