உருகுவேயுடன் போராடி சமநிலை கண்டது சவுதி அரேபியா
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
மியாமி, ஜூன் 16 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் ஹெச்’ பிரிவு முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி வலுவான உருகுவே அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்று தனது உலகக் கோப்பை பிரசாரத்தை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளது.
மியாமி கார்டன்ஸில் உள்ள மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் தொடக்கம் முதலே வேகமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியின் 42-ஆவது நிமிடத்தில் அப்துலிலாஹ் அல்-அம்ரி அடித்த கோல் மூலம் சவுதி அரேபியா முன்னிலை பெற்றது.
முன்னிலையைப் பெற்ற பிறகு சவுதி வீரர்கள் ஒழுங்கான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், உருகுவேயின் தாக்குதல்களையும் திறமையாகச் சமாளித்தனர். எனினும், இரண்டாவது பாதியில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த உருகுவே, 80-ஆவது நிமிடத்தில் மாக்சிமிலியானோ அராவ்ஹோ அடித்த கோல் மூலம் ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



