புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சரஸ்வதி பூஜை!

top-news

(இரா.கோபி)
கோலாலம்பூர், அக். 13–
நாடுதழுவிய அளவில் தமிழ்ப்பள்ளிகளில் சரஸ்வதி பூஜை மிகச்
சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் புக்கிட் ஜாலில் தோட்டத்
தமிழ்ப்பள்ளியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது என்று
இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திருமதி பூ.கனகேஸ்வரி
தெரிவித்தார்.

காலையில் சிறப்பு பூஜைகள் நடபெற்று, பின்னர் மாணவர்களின்
படைப்புகள் இடம்பெற்றன. பரதநாட்டியம், பஜனை, பாரம்பரிய நடனம்,
வயலின், திருமுறை ஒதுதல் போன்றவை நடைபெற்றன.

இப்பூஜைக்கு சிறப்பு வருகை புரியவிருந்த பூச்சோங் தொழிலதிபர்
பத்மநாதன் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியவில்லை. 'தமிழ் மலர்' நிருபர் இரா.கோபி கலந்து கொண்டார்.

மதியம் சிறப்பு பூஜைக்குப் பின்னர் மாணவர்களுக்கு இனிப்புப்
பலகாரங்களும் புதிய புத்தகங்கள், பென்சில்கள் ஆகியவற்றை
இரா.கோபி வழங்கினார்.

இப்பூஜையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், புக்கிட் ஜாலில்
ஆலய முன்னாள் தலைவர், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா
கொக்கின் பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டத்தோ பத்மநாதன் ஏற்பாட்டில் அறுசுவை
உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிரமம் பாராமல் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக பள்ளியின் தலைமையாசிரியர் லெ.ராமச்சந்திரன், துணைத்
தலைமையாசிரியர் ஆகியோர் கூறினர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்