வீட்டின் கூரை மீது பாய்ந்த கார்!

top-news
FREE WEBSITE AD

கோலா பிலா, மே 30: நேற்று இரவு ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், ஸ்ரீ மெனாந்தியில் ஒரு குன்றின் அடிவாரத்தில் இருந்த வீட்டின் கூரையின் மீது கார் ஒன்று மோதியது.

ஸ்ரீ மெனாந்தியிலிருந்து சிரம்பான்  நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த வாகனம், கம்போங் தஞ்சோங் பாச்சாங் என்ற இடத்தில் சாலையிலிருந்து விலகிச் சென்று கீழே இருந்த வீட்டின் கூரையின் மீது மோதியதாக கோலா பிலா காவல்துறைத் தலைவர் முஸ்தபா ஹுசைன் கூஈனார்.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லை, என்று அவர் கூறினார்.

காரில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் கோலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதேசமயம், 63 வயதான ஓட்டுநரும் மற்றொரு பயணியும் காயமின்றி தப்பினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *