போர் சூழலால் சுற்றுத்துறைக்குப் பாதிப்பு! - பொருளாதார அமைச்சர்
- Shan Siva
- 15 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 15: மலேசியாவின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகள், தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளன என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நசீர் கூறுகிறார்.
மார்ச் 23 முதல் 28 வரை ஆறு விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 55 வாராந்திர விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும், மார்ச் 1 முதல் 25 வரை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு பதிவாகியுள்ளது என்றும் அக்மல் கூறினார்.
இந்த ஆண்டு மேற்கு ஆசியாவிலிருந்து 1.5 மில்லியன் விமானப் பயணிகள் மட்டுமே வருவார்கள் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், மற்ற போக்குவரத்துப் பிரிவுகள், குறிப்பாக சரக்கு கையாளுதல் மற்றும் பொதுப் போக்குவரத்து பயணிகள் இயக்கம், தற்போதைக்கு ஒப்பீட்டளவில் நிலையானதாகவே உள்ளன என்று உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்த மோதல் தொடர்ந்தால், ஜூன் மாதம் தொடங்கும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொழிலாளர் சந்தையின் தாக்கம் மேலும் தெளிவாகத் தெரியவரும் என்று அக்மல் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



