ஹரிமாவ் மலாயா வியட்நாமை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது - கிளமோவ்ஸ்கி!

- Muthu Kumar
- 11 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 11-
மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா, வியட்நாமுக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றி பெறுவதற்கு முழு தயார்நிலையில் உள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் பீட்டர் கிளமோவ்ஸ்கி தெரிவித்தார். புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் ஆட்டம், ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (ஏ.எஃப்.சி) உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாகும்.
மலேசிய அணி இப்போது முற்றிலும் மாறுபட்ட மனோவேகத்தில் உள்ளது. வீரர்கள் உடலாலும் மனதளவிலும் மிகவும் வலுவாக உள்ளனர். வியட்நாம் ஒரு சிறந்த அணி என்றாலும், மலேசிய அணி அவர்களை வீழ்த்தும் என ஹரிமாவ் மலாயாவின் தலைமை பயிற்றுநர் தெரிவித்தார். அண்மையில் கேப் வெர்டே அணிக்கு எதிராக நடந்த இரண்டு நட்பு போட்டிகளில் ஹரிமாவ் மலாயா சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமுக்கு எதிரான இந்தப் போட்டியில், மலேசிய வீரர்களின் உலக காற்பந்து அரங்கில் விளையாடிய அனுபவங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று கிளமோவ்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாட்டு கிளப் அணிகளுக்கு விளையாடும் வீரர்களின் திறமைகள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்
மலேசிய கால்பந்து ரசிகர்கள் இந்தப் போட்டியில் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
வியட்நாமுக்கு எதிரான வெற்றி எங்களை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் முன்னேறுவதற்கு முக்கியமானது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை நோக்கிய மனநிலையுடன் களமிறங்குவோம் என தலைமை பயிற்றுநர் தெரிவித்தார்.
Harimau Malaya bersedia sepenuhnya menentang Vietnam dalam saingan kelayakan Piala Dunia AFC. Jurulatih Peter Klimovski yakin pemain bersemangat tinggi dan berpengalaman. Kemenangan penting ini bakal membawa Malaysia selangkah ke hadapan dalam kejohanan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *