பாரிசான் - பாஸ் பேச்சுவார்த்தையா?! - அப்படியெல்லாம் இல்லை! - சம்சுரி
- Shan Siva
- 02 Jul, 2026
மூவார், ஜூலை 2: ஜொகூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே முறையான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்படும் யூகங்களை பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் சம்சுரி மொக்தார் நிராகரித்துள்ளார்.
பாஸ் கட்சியின் உதவித் தலைவராகவும் இருக்கும் சம்சுரி, பாஸ் கட்சி ஜூலை 11 தேர்தலுக்காகத் தனது சொந்த தேர்தல் இயந்திரங்கள் மற்றும் பிரச்சார உத்திகளில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
ஜொகூர், தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு கட்சியும் தத்தமது பிரச்சார முயற்சிகளில் கவனம் செலுத்துவதால், பாஸ் மற்றும் பாரிசான் நேஷனல் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.
தற்போது பேசப்படும் ஒத்துழைப்பு என்பது வெளியாட்களின் ஒரு கருத்து மட்டுமே. உண்மையில் நடப்பது என்னவென்றால், ஒவ்வொரு தரப்பும் தத்தமது தொகுதிகளில் தத்தமது சொந்த முடிவுகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



