MIPP-க்கு பாரிசான் அழைப்பு! இந்திய இளம் வாக்காளர்களின் நம்பிக்கையாகிறதா MIPP?!
- Shan Siva
- 07 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 7: ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, பெரிகாத்தான் நேஷனலில் இருந்து விலகி, அதற்குப் பதிலாக பாரிசான் நேஷனலில் இணைய வேண்டும் என அம்னோ பரிந்துரைத்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் MIPP பி. புனிதன் ஆகியோருக்கு இடையே, மூத்த அம்னோ தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக நம்பகமான வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளதாக FMT செய்தி வெளியிட்டுள்ளது.
பாரிசான் நேஷனலில் சேருமாறு MIPP-ஐ அழைப்பதற்காக அம்னோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்று அந்த வட்டாரம் FMT-யிடம் தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு மற்றும் கட்சிக்கான பிற முக்கிய சலுகைகள் உட்பட பல விவரங்கள் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இளம் இந்திய வாக்காளர்களிடையே MIPP-க்கு வளர்ந்து வரும் ஆதரவே அம்னோவின் கவனத்தை ஈர்த்ததாக அந்த வட்டாரம் கூறியது.
MIPP-யின் எழுச்சியே, அது BN-ல் சேர வேண்டும் என அம்னோ விரும்புவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



