அறிவுச்சுடராழி- அனைத்துலக அளவிலான தமிழ் இலக்கண இலக்கியப் புதிர்ப்போட்டி

top-news
FREE WEBSITE AD

தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் அமையப்பெற்றுள்ள, சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் முதலாவது முறையாக அனைத்துலக அளவிலான 'அறிவுச்சுடராழி' தமிழ் இலக்கண இலக்கியப் புதிர்ப்போட்டி ஒன்றனை ஏற்பாடு செய்தது. அதன் நிறைவு விழா கடந்த 27 ஆம் திகதி ஜூன் மாதம் 2026 அன்று நடைபெற்றது. 

இப்போட்டியானது. உப்சி பல்கலைக்கழகப் புதிய வளாகத்தில் அமையப்பெற்றுள்ள Panggung percubaanஇல் நடைபெற்றது. இப்போட்டி மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு என இரண்டு பிரிவுகளை உட்படுத்தியது. மாணவர் பிரிவில், 18 வயது முதல் 25 வயது வரை இருக்கக்கூடிய உள்நாட்டு உயர்கல்விக்கூட மாணவர்கள் . உப்சி பல்கலைக்கழகம், மலாயாப் பல்கலைக்கழகம் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், துவான்கு பைனூன் கல்விக் கழகம், இல்மூ காஸ் கல்விக் கழகம், துவான்கு பைனூன் கல்விக் கழகம் ஆகிய உயர்கல்விக் கூடங்களிலிருந்து மாணவர் பிரிவில் கலந்து கொண்டனர். இப்பிரிவுக்கான சுற்று முறையில், 5 சுற்றுகளாக நிறைவு விழாவிற்கு முன்னதாக நேர்நிலையில் நடைபெற்றது. மாணவர் பிரிவில் முதல் பிரிசை உப்சி  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கனல் அணியினரும், இரண்டாம் பரிசினை மலாயாப் பல்கலைகத்தைச் சேர்ந்த அறிவன் வாகையர் அணியினரும் மூன்றாம் பரிசை மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நற்றமிழர் அணியினரும், நான்காம் பரிசை தெங்கு அம்புவான் அவ்சான் கல்விக் கழகத்தைச் சேர்ந்த கலக்கப்போவது யாரு அணியினரும் தட்டிச் சென்றனர். 

அதே வேளையில், பொதுப் பிரிவில், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள். பதினெட்டுக் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். முன்னமே, இதன் முதலாம் சுற்றும் இரண்டாம் சுற்றும் நடைபெற்று அதிலிருந்து 6 குழுக்கள் முன்னேறி, நேர்நிலையில் நடைபெற்ற மூன்றாம். & இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர். இப்பிரிவில் பெரும்பாலும் ஆசிரியர்களே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் இலங்கை, சிங்கப்பூர்,  இந்தியாவிலிருந்தும் பங்கேற்றனர். பொதுப் பிரிவில் 3000 ரிங்கிட் ரொக்கப் பரிசான முதல் பரிசை முச்சுடர் அணியினரும் இரண்டாம் பரிசினை ஆதித்தன் அணியினுரும்
மூன்றாம் பரிசை சுடரி அணியினரும் நான்காம் பரிசை சுடர்பரிதி அணியினரும் பெற்றனர். 

இப்போட்டியில், பங்கேற்பாளருக்கு முன்னதாகவே வழிகாட்டி நூல் வழங்கப்பட்டுள்ளது. அதனைச் சார்ந்தே போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டது . மலேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சரும். சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான, மாண்புமிகு யுனேஸ்வரன் இராமராஜ் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்புச் செய்தார்.  மொழி என்பது வெறும் தொடர்பாடும் கருவி மட்டுமன்று ; அது நம் அடையாளம் என்றும் அவர், பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை வெறும் மாணவர்களுக்காக மட்டும் நடத்தாது சமுதாயத்திற்காகவும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், பேராசிரியர் முனைவர் நோர் காலிட் அவர்களும் மொழி தொடர்பியல் புலத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் மசூரா மஸ்துரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *