அதிகாலையில் பரபரப்பு! தனது வாகனத்தை இன்னொரு கார் மீது மோதி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவர் கைது!
- Shan Siva
- 24 May, 2026
பெட்டாலிங் ஜெயா, மே 24: நேற்று அதிகாலை டாமன்சாரா பெர்டானாவில் உள்ள ஜாலான் PJU 8/1 சாலையில், தனது SUV வாகனத்தை ஒரு காரின் மீது மோதி, அதன் ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.
அதிகாலை 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து காலை 10.30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா காவல் துறைத் தலைவர் ஷம்சுதீன் மமாட் தெரிவித்தார்.
சந்தேக நபரான 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர், போக்குவரத்து சிக்னலில் நிற்கத் தவறி, தனது SUV வாகனத்தை ஒரு காரின் மீது மோதியதாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், அந்த காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயமடைந்தார், என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பெட்டாலிங் ஜெயா காவல் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக ஷம்சுதீன் கூறினார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று பெட்டாலிங் ஜெயா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் உத்தரவு கோரி போலீசார் விண்ணப்பிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



