வெள்ளத்தில் கவிழ்ந்த கார்! முதியவர் பரிதாப பலி!

top-news

கோலாலம்பூர், அக் 30: சுங்கை கம்போங் குந்தூர் ஹுலு ஆற்றின் அருகே உள்ள சாலையில், பெரோடுவா மைவி கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்த முதியவர் பலியனார்.

இரவு 9.20 மணியளவில் முதியவரின் மகன் அவசர உதவிக்கு அழைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காருக்குள் சிக்கியிருந்த முதியவர் மீட்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது உடல் ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே, பெடாஸ் பகுதியில் திடீர் வெள்ளத்தின்போது வேகமாகப் பாய்ந்த நீரில் அடித்துச் செல்லப்பட்ட 38 வயது இந்தோனேசிய ஆடவர் ஒருவரையும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

மரங்களுக்கு இடையே சிக்கியிருந்த அவரை, மீட்புப் படையினர் மனிதச் சங்கிலி அமைத்து இரவு 8.40 மணியளவில் ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்தனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்