அர்செனல் அதிரடி: ஐந்தாம் சுற்றுக்கு முன்னேற்றம்

top-news

லண்டன், பிப். 16-

அர்சனல்  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எப்ஏ கிண்ண  போட்டியின் ஐந்தாம் சுற்றுக்கு முன்னேறியது. இன்று அதிகாலை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் அது வீகன் அணியை  4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அர்செனல், எமிரேட்ஸ் மைதானத்தில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடியது. முதல் 27 நிமிடங்களுக்குள் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டதால் போட்டி முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

நான் மொடுக்கா முதலில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதைத் தொடர்ந்துமார்டினேலி  இரண்டாவது கோலை அடித்தார். 

2020ஆம் ஆண்டில் கோப்பையை வென்றதற்கு பிறகு முதன்முறையாக கடைசி 16 அணிகளுக்குள் அர்செனல் மீண்டும் நுழைந்துள்ளது. ஆர்டேட்டா காலகட்டத்தில் கிடைத்த ஒரே பெரிய பட்டம் அதுவாக இருப்பதால், இந்த முன்னேற்றம் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *