சபா, குண்டாசாங்கில் நில நடுக்கம்!
- Shan Siva
- 03 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 3: சபாவின் குண்டாசாங் பகுதியில் நேற்று 2.9 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.36 மணிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சபாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்படலாம் என்று நேற்று ஒரு முகநூல் பதிவில் மெட் மலேசியா கூறியுள்ளது.
மெட்மலேசியா நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நில அதிர்வுகளை உணர்ந்தவர்கள் அதன் இணையவழி கணக்கெடுப்புப் படிவத்தின் மூலம் தங்கள் கருத்துளைச் சமர்ப்பிக்குமாறும் மெட் மலேசியா வலியுறுத்தியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



