இந்தோனேசியாவில் நில நடுக்கம்; கிள்ளானில் உணரப்பட்டது
- Shan Siva
- 22 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 22: இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ரிக்டர்
அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கிள்ளான்
பள்ளத்தாக்குவாசிகள் நில அதிர்வுகளை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம்
மதியம் 12.18 மணிக்கு,
இந்தோனேசியாவின் லாங்சாவிலிருந்து 55 கி.மீ தென்மேற்கே, 10 கி.மீ ஆழத்தில் மையப்புள்ளியுடன் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு
மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
தீபகற்ப
மலேசியாவின் மேற்குக் கடற்கரையில் நில அதிர்வுகள் உணரப்பட்டன என்று அது ஒரு முகநூல் பதிவில் கூறியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா,
காஜாங், பூச்சோங், கிள்ளான் மற்றும்
செலாயாங் ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகளை உணர்ந்ததாக சில இணையவாசிகள்
தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



