பத்து பஹாட் கடற்பகுதியில் நிலநடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 23: ஜொகூர் மாநிலத்தின் பத்து பஹாட் (Batu Pahat) கடற்பகுதியில் நேற்று மாலை 4.55 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற பதிவினைக் கொண்ட நிலநடுக்கம் ஏற்ப்ட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பத்து பஹாட் நகருக்கு தென்மேற்கே 27 கி.மீ தொலைவில், வடக்கே 1.7 டிகிரி மற்றும் கிழக்கே 102.7 டிகிரி ஆயத்தொலைவுகளில் (coordinates), 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்த மையம் கூறியது.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன என்று MetMalaysia ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த மையம் கூறியது.

கடந்த மாதம், பத்து பஹாட் கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.1 என்ற நிலையில்  ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *