துணை அமைச்சருடன் நீதிமன்றம் வந்த அருண்துரைசாமி ஜாமினில் விடுதலை!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 17,

இஸ்லாமியர்களைப் புண்படுத்தும்படி கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சமூக ஆர்வலரும் இந்து ஆகம அணியின் ஒருங்கிணைப்பாளருமான அருண் துரைசாமி இன்று காலை NIPONG TEBAL JAWI MAJISTRET நீதிமன்றத்தில் ஆஜரானார். அருண் துரைசாமியை டி.ஏ.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான குலசேகரன் நீதிமன்ற வாசலில் வரவேற்று அதரவை வெளிப்படுத்தினார்.  கடந்த மார்ச் 12  பிற்பகல் 3.45 மணிக்கு அருண்துரைசாமி தனது சமூகவலைத்தலத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் எந்தவொரு சமூகத்தையும் இழிவுப்படுத்தும் நோகத்தில் தாம் அந்த பதிவை வெளியிடவில்லை என கூறி அருண் துரைசாமி தன் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமின் கோரிக்கையை முன்வைத்தார். 

ஜாமின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட NIPONG TEBAL JAWI MAJISTRET நீதிமன்ற நீதிபதி Nurul Aina Ahmad ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM5,000 ரிங்கிட் ஜாமின் வழங்குவதுடன் அடுத்த விசாரணை ஜூன் 22 மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.  முன்னதாகத் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Khalid Ismail இன மத உணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் குற்றங்களுக்காக அருண்துரைசாமி, ZAMRI VINOTH, TAMIM DAHRI, Mahendra Bhoopathy Pirmal என நால்வரும் வெவ்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். சம்மந்தப்பட்ட நால்வரில் TAMIM DAHRI எனும் ஆடவரைக் காவல்துறை தேடி வருவதாக தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Khalid Ismail தெரிவித்தார். TAMIM DAHRI எனும் ஆடவர் முன்னதாகக் கோயில் இடிக்க எந்திரம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டியது, லங்காவியில் உள்ள இந்து கோயிலின் திரிசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *