1MDB விசாரணைக் குழுவைக் கலைக்க அமேரிக்க நீதிமன்றம் உத்தரவு!

top-news

பிப்ரவரி 7,


மலேசியாவின் முதலீட்டு ஊழலான 1MDB ஊழலை விசாரித்து வந்த அமேரிக்காவின் நீதித்துறை இனி விசாரணையைத் தொடராது என்றும், 1MDB ஊழல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைக் கலைக்கும்படியும் அமேரிகாவின் நீதித்துறை தலைமை இயக்குநர் Pamela Jo Bondi தெரிவித்தார். 

அமேரிக்கா அல்லாத பல்வேறு நாடுகளின் வழக்குகளை அமேரிக்காவில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த Pamela Jo Bondi, ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டதாக நம்பப்படும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் சம்மந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைக்கும்படியும் அமேரிக்க நீதித்துறையிடம் பறிமுதல் செய்யப்பட்ட பிற நாட்டு பணங்களைக் கொண்டிருக்க கூடாது என்றும் Pamela Jo Bondi திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதனால் பாதிக்கப்படும் நாடுகள் அமேரிக்காவின் உதவியை நாடினால், அதன்பின்னர் வழக்குகளை ஏற்பதா இல்லையா என்பதைப் பற்றி நீதித்துறை சிந்திக்கும் என Pamela Jo Bondi தெரிவித்தார்.

Amerika Syarikat membubarkan pasukan siasatan khas 1MDB seperti yang diumumkan oleh Ketua Pengarah Jabatan Kehakiman (DoJ) Pamela Jo Bondi. Beliau menegaskan bahawa AS tidak perlu menyiasat kes rasuah luar negara dan dana yang dirampas akan dipulangkan kepada negara asal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *