மலேசியா தலைமையில் ஆசியான்–சீனா பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்புத் திட்டம்! RM19.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

top-news

மலேசியா, சீனா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் நம்பிக்கையைப் பெற்று, சுமார் 19.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) வழியாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், 2028ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இதன் கீழ் பேரிடர் மேலாண்மைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல், அவசரகால ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பேரிடர் மேலாண்மையில் மலேசியா கொண்டுள்ள அனுபவம் மற்றும் திறன்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக இந்தப் பொறுப்பு அமைந்துள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலை இந்தோனேசியாவின் டாங்கராங்கில் நடைபெற்ற ஆசியான்–சீனா பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்