குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க ஆசியான் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – நான்சி ஷுக்ரி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 4-

குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்க ஆசியான் (ASEAN) நாடுகள் தங்களின் ஒத்துழைப்பையும் உறுதிப்பாட்டையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மலேசிய மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தியுள்ளார்.

9-ஆவது ஆசியான் குழந்தைகள் மன்றத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், குறிப்பாக டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் உருவாகி வரும் புதிய அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றார். எதிர்கால தலைமுறையின் நலனையும், பிராந்தியத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் தெரிவித்தார்.

தற்போது ஆசியான் நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 20 கோடி குழந்தைகள் வாழ்கின்றனர். இது உறுப்புநாடுகளின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இந்த புள்ளிவிவரங்கள், ஆசியானின் எதிர்காலம் இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாக நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழல், கண்ணியமான வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குழந்தைகளின் நலனே அனைத்து அரசுக் கொள்கைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *