பெண்ணுடன் இருந்ததாக வழக்கு! நிக் நஸ்மியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை
- Shan Siva
- 27 Oct, 2026
கோலாலம்பூர், அக் 27: முன்னாள் சித்தியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது, ஒரு பெண்ணுடன் இருந்ததாக எழுந்த சந்தேக வழக்கு தொடர்பாக மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில், ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையின் அலுவலகத்திலிருந்து
அவர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு சிலாங்கூர் ஷரியா குற்றவியல்
சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் நடைபெறும் விசாரணையை
முடிப்பதற்கு, நிக் நஸ்மி சமயத் துறை அதிகாரிகளுக்கு
ஒத்துழைப்பு வழங்கியதாக ஷரியா வழக்கறிஞர் அமிருல் அஷ்ரப் கனி தெரிவித்தார்.
குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3,000 ரிங்கிட் அபராதம்
அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு
இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்ட அமிருல், நிக் நஸ்மி மீது குற்றச்சாட்டு பதிவு
செய்யப்படுமா என்பது குறித்து சிலாங்கூர் ஷரியா அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரிவின்
முடிவுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் இச்சம்பவத்தை நிக் நஸ்மி முன்னதாக
உறுதிப்படுத்தியிருந்தார்.
சந்தேகத்தை
ஏற்படுத்தும் வகையில் தகாத செயல்களில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த அவர், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தமது
மனைவி, குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம்
மன்னிப்பும் கேட்டிருந்தார். இது தமது தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பெர்சாமா கட்சியின் இணைத் தலைவரான நிக்
நஸ்மி, அக்டோபர் 20ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு கட்சியின் அனைத்து
அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

