RM 10 லட்சம் அடங்கிய பை காணாமல் போன விவகாரம் - இருவர் கைது!

top-news

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 8: 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது தொடர்பாக  இரண்டு காவலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று இரவு 10 மணியளவில் 52 வயது ஆணும் 38 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா காவல்துறை தலைவர் அசாம் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.  அவர்கள் ஞாயிற்றுக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் எஸ் சசிகலா தேவி, ஜாலான் உலு கிள்ளானில் நேற்று பொதுமக்களால் பை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 செக்யூரிட்டி வேனில் இருந்து அந்த பை திடீரென திரும்பும் போது அதில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சசிகலா கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.

அம்பாங்கில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கோலாலம்பூருக்கு வேன் பயணித்ததாக நம்பப்படுகிறது.

 நேற்று, அம்பாங் பாயிண்ட் மாலில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பாதுகாப்பு நிறுவனத்தால் பணம் வசூலிக்கப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்