“நேர்மையே காவல்துறையின் மிகப்பெரிய பலம்” – ஆயோப் கான் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 15 Jun, 2026
இஸ்கண்டார் புத்ரி, ஜூன் 15 –
பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், மலேசிய அரச காவல்துறையின் (PDRM) நற்பெயரை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதிகாரிகள் மற்றும் காவலர்களிடையே நேர்மை மற்றும் ஒழுக்கம் (Integrity) தொடர்ந்து முதன்மையாக வலியுறுத்தப்படும் என்று துணை காவல்துறைத் தலைவர் Tan Sri Ayob Khan Mydin Pitchay தெரிவித்தார்.
இன்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல்துறை தலைமையக (IPD) திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிநவீன உபகரணங்கள் மற்றும் நீண்டகால அனுபவம் இருந்தாலும், நேர்மை இல்லையெனில் அவை அனைத்தும் பயனற்றதாகிவிடும் என்றார்.
“நமக்கு அனுபவமும் திறமையும், அதிநவீன சொத்துகளும் இருக்கலாம். ஆனால் நேர்மை இல்லையெனில் அவை அனைத்திற்கும் எந்த மதிப்பும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், நேர்மை என்பது அனுபவத்திலோ திறமையிலோ இருந்து வருவதில்லை என்றும், அது ஒருவரின் உள்ளத்திலிருந்தும் குணநலனிலிருந்தும் உருவாகும் உயர்ந்த பண்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒருவர் தனது குணநலனையும் ஒழுக்கத்தையும் இழந்துவிட்டால், அவர் அனைத்தையும் இழந்தவராகிவிடுகிறார். எனவே, காவல்துறையில் ஒவ்வொரு அதிகாரியும் நேர்மையை உயர்ந்த பண்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றும் ஆயோப் கான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



