கைவிட்டதா திமுக? கலக்கத்தில் ஓபிஎஸ்!
- Muthu Kumar
- 29 Mar, 2026
தமிழக அரசியலில் நேற்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியல், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்த ஓபிஎஸ்-க்கு மட்டும் அவர் கேட்ட போடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோருக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பு மிகவும் நம்பிக்கையுடன் கேட்ட உசிலம்பட்டி தொகுதியைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்குத் தூக்கிக் கொடுத்துள்ளது திமுக தலைமை. இது ஓபிஎஸ் தரப்பினரை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனுக்கும், தனது வலதுகரமாக இருந்த அய்யப்பனுக்கும் சீட் கிடைக்கும் என்று ஓபிஎஸ் உறுதியாக நம்பியிருந்த நிலையில், இந்த முடிவு அவருக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"சொந்த ஊரான உசிலம்பட்டியிலேயே அய்யப்பனுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது பெரும் பின்னடைவு" என அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். ஓபிஎஸ்-க்கு மட்டும் தொகுதி ஒதுக்கிவிட்டு, மற்றவர்களை ஓரங்கட்டியது திமுக-வின் தந்திரமான நகர்வா? என்ற விவாதம் இப்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



