திருமண புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா!
- Muthu Kumar
- 27 Feb, 2026
இந்தியாவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமெண்டோஸ் நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவுன் இணைந்து நடித்தார்கள். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தபோதிலும் தங்களது காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாக பேசியதில்லை. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது கூட திருமணத்தைப் பற்றி அவர்கள் பேசவில்லை. இப்படியான நிலையில் கடந்த வாரம் தங்களது திருமணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் உறுதிபடுத்தினார்கள்.
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இருவரும் ராஜஸ்தான் புறப்பட்டு சென்றார்கள். ஹல்தி , மெஹந்தி இன்று திருமணம் என மூன்று நாட்கள் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமெண்டோஸ் நட்சத்திர விடுதியில் ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
தங்களது திருமண புகைப்படங்களை அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். ராஷ்மிகா பற்றி விஜய் தேவரகொண்டா " ஒரு நாள் நான் அவளை ரொம்பவவும் மிஸ் பண்ணேன். அவள் என் உடன் இருந்திருந்தால் இந்த நாள் இன்னும் அழகானதான இருந்திருக்கும் என்று தோன்றியது. என் உணவு இன்னும் முழுமையானதாக இருந்திருக்கும் என்று தோன்றியது. என் உடற்பயிற்சி ஒரு தண்டனையாக இல்லாமல் ஜாலியாக இருந்திருக்கும் என தோன்றியது. நான் எங்கே இருந்தாலும் அமைதியாகவும் வீட்டில் இருப்பது போல உணரவும் அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படிதான் என் நெருங்கிய தோழியை என் மனைவியாக்கினேன். " என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வரும் மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



