PN கூட்டணியில் பாஸ் மகிழ்ச்சியாக இல்லை! - பாஸ் ஆன்மீகத் தலைவர் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 20: பெர்சாத்து முக்கிய பதவிகளை பிடிப்பது எதிர்க்கட்சி உடன்படிக்கையில் முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பெரிகாத்தான் நேஷனல்  தலைவர் முகைதீன் யாசின், கூட்டணியில் தலைமைப் பதவிகளை மறுபகிர்வு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நான்கு மாநிலங்களை ஆளும் மற்றும் நாடு முழுவதும் வலுவான அடிமட்ட ஆதரவைக் கொண்டிருக்கும் PAS கட்சிக்கு பெரிக்காத்தானுக்குள் பொருத்தமான பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஹஷிம் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்,

PAS உறுப்பினர்களும் தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என்று தாம் நம்புவதாகவும், முக்கிய பதவிகளில் பெர்சாத்துதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உதாரணமாக, PN தலைவர் பெர்சாத்துவைச் சேர்ந்தவர் என்றால், துணைத் தலைவர் பதவி PAS கட்சிக்கு வழங்கப்பட வேண்டும், ஆனால் இது கூட நடக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *