ஜூன் 26 முதல் 30 வரை பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூடப்படும்
- Shan Siva
- 24 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 24: கணினி பராமரிப்புப் பணிகளை எளிதாக்கும் பொருட்டு,
குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் உள்ள 71 கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகங்களில் உள்ள
கடவுச்சீட்டு சேவை மையங்களை ஜூன் 26 முதல் 30 வரை கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடவுள்ளது.
தனது முதல்
கட்டப் பணிகளில் குடிநுழைவுத்துறை தலைமையகம், ஜாலான் டூத்தா (கோலாலம்பூர்), கிலானா ஜெயா, கே.எல்.ஐ.ஏ மற்றும் மலாக்காவில் உள்ள கிளைகள் ஆகியவை அடங்கும் என்று இன்ஸ்டாகிராம்
பதிவு ஒன்றில் குடிநுழைவுத்துறை கூறியுள்ளது.
புடுராயா,
ஜொகூர் பாரு, பாசிர் கூடாங், சிரம்பான், ஈப்போ, சுங்கை பெட்டானி மற்றும் செபெராங் பெராய் ஆகிய
இடங்களில் உள்ளவை உட்பட ஒன்பது நகர்ப்புற மாற்ற மையங்களும் இதில் அடங்கும்.
அக்காலகட்டத்தில்,
நேரில் மற்றும் மைஆன்லைன் பாஸ்போர்ட் வழியாக
கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும், கடவுச்சீட்டு அச்சிடும் சேவைகளும் கிடைக்காது என்று இத்துறை
கூறியுள்ளது.
பொதுமக்கள்
தங்களின் கடவுச்சீட்டுத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும், முழு விவரங்களுக்குத் துறையின் அதிகாரப்பூர்வ
வழிகளைப் பார்க்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



