சிம்பாங் ரெங்காமில் கோர விபத்து! சிறுமி உட்பட நால்வர் பலி
- Shan Siva
- 02 Jun, 2026
குளுவாங், ஜூன் 2: சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலைக்கு எதிரே, ஜொகூர் பாரு-ஆயர் ஹீத்தாம் சாலையில் நேற்று நடந்த விபத்தில் 10 வயது சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
டொயோட்டா வியோஸ், பெரோடுவா அல்சா, புரோட்டான் வீரா, மெர்சிடிஸ் E240 மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து பிற்பகல் 1.16 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக ரெங்காம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி இஸ்மாயில் மமாட் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனமும் ஐந்து பணியாளர்களும் அனுப்பப்பட்டதாகவும், டொயோட்டா வியோஸ் காருக்குள் பலர் சிக்கியிருந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
டொயோட்டா வியோஸ் காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான வயதான பெண்மணி, காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு மெர்சிடிஸ் காரின் மீது விழுந்தார் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



