Ayer Keroh R&R அருகே பயங்கர விபத்து! 7 பேர் பலி; 33 பேர் காயம்
- Shan Siva
- 24 Dec, 2024
அலோர் கஜா, டிச 24: ஆயர் குரோ (ஆர்&ஆர்) அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM204 இல் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.
27 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து, ஒரு டிரெய்லர் மற்றும் டொயோட்டா எஸ்டிமா எம்பிவி வாகனம் ஆகியவை விபத்துக்குள்ளானதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முகமட் பிசார் அஜீஸ் தெரிவித்தார்.
இந்த பயங்கர விபத்தில் பலியானவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் டொயோட்டா எஸ்டிமாவின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு பேர் சுற்றுலா பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணித்த ஒரு பெண் என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
காயமடைந்த 17 பேர் மலாக்கா மருத்துவமனைக்கும், 10 பேர் அலோர் காஜா மருத்துவமனைக்கும், மேலும் ஆறு பேர் பந்தாய் ஆயர்குரோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டதாக முகமட் பிசார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



